

‘அறம் அரண் ஆகட்டும்’ தலையங்கம் தமிழகத்தின் அரசியல் மற்றும் சமுதாய நடவடிக்கைகளை உற்று நோக்குபவர்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.
சகாயம் போன்ற ஆளுமைத் திறமையுள்ளவர்கள் எங்கு சென்றாலும் பரிணமிப்பார்கள் என்பதற்கு உதாரணம்தான் தற்போது நிகழ்ந்துள்ள நிகழ்வு. அரசியல் சித்து விளையாட்டில் அவர்களைப் பணிமாற்றம் மட்டும்தான் செய்ய இயலும். ஆனால், எந்தத் துறைக்கு மாற்றினாலும் அந்தத் துறையில் அரசியல்வாதிகளால் செய்ய முடியாதவற்றைச் செய்து தங்களைத் தாங்களே மீண்டும் மீண்டும் நிரூபிப்பார்கள்.
- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.