

‘சிறகடிக்கும் பயணி: இபின் பதூதா’ பற்றி சா. தேவதாஸ் எழுதிய கட்டுரையைப் படித்து ரசித்தேன். ஒரு இஸ்லாமியப் பயணியைப் பற்றிப் பெரும்பாலான இஸ்லாமியர்களே அறிந்திருக்காத பல விஷயங்களையும் தகவல்களையும் மிகச் சிரமப்பட்டுச் சேகரித்து, அருமையாக எழுதியிருக்கிற கட்டுரையாளருக்கு நன்றி.
லடாகியா பகுதியில் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள்பற்றி ‘இபின் பதூதா' உலகுக்குத் தெரிவிப்பது இதுவரை யாருமே அறிந்திராத செய்தி. இஸ்லாத்தின் மிகப் பெரிய பயணி ‘இபின் பதூதா' என்பதில் ஐயமில்லை.
- கே.பி எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.