

கடவுளாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்ககளில் பலர் இன்று பணம் பிடுங்கும் இயந்திரங்களாய் மாறியதாலும், கேட்டும் தொட்டும் பார்த்தும் தன் அனுபவ அறிவோடு சிகிச்சை அளித்த மருத்துவம் எதையும் சோதனை செய்து பார்த்தே சிகிச்சை தரும் மருத்துவமாய் மாறியதாலும்தான் மருத்துவ உலகின்மீதும் கேள்விகள் பாய்ந்தன. எல்லா ‘டாக் ஷோ’க்களிலும் எதை எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துத்தான் சுவாரஸ்யத்துக்காய் வெட்டி ஒட்டிதான் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஜோடிக்கப்பட்ட நிகழ்ச்சியாய் இருந்தாலும் கேள்விகளில் இருந்த நியாயத்தை யாராலும் மறுக்க முடிவதில்லை.
- ஏ.எம். நூர்தீன், சோளிங்கர்.