

கோவையில் நடந்த ‘தி இந்து’வின் ஓராண்டு நிறைவு விழா நிகழ்சிகளைப் படித்தேன். மகிழ்ந்தேன். சாதிக்கத் துடிக்கும் இதயங்களில் உற்சாக நீர் தெளித்ததுபோல் நச்சென்று இருந்தது சிறப்பு விருந்தினர்கள் கூறிய கருத்து விமர்சனங்கள். நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் உள்ள குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி, நம் தன்னம்பிக்கையைப் பதம் பார்க்கும் அதிபுத்திசாலிகளின் விமர்சனங்களில் கவனம் செலுத்தாமல், அவர்கள் குறிப்பிட்ட குறைகளை மட்டும் களைந்து, நம் இலக்கு நோக்கிப் பயணிப்பதே நம் சாதனைக்கு வழிவகுக்கும்.
எங்கள் ஊருக்கு எப்போது வாசகர் திருவிழா வரும்?
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
- சுபா தியாகராஜன்,சேலம்.