

மனித நேய அறக்கட்டளையில் பயிற்சி: ஆறு பேருக்கு அரசு வேலை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில், மொத்தமுள்ள 12 காலியிடங்களில், மனித நேய அறக்கட்டளை மூலம் பயிற்சி பெற்ற ஆறு பேர் தேர்வாகியுள்ளனர்.
இதில் மாநில அளவில் இரண்டு பேர் முதலிடம் வகித்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மனித நேய அறக்கட்டளை உணவு, இருப்பிடம் மற்றும் பயிற்சி அளித்து, அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டிவருகிறது.
இச்செய்தியை வெளியிடும்போது, மனித நேய அறக்கட்டளை பற்றியும், அதை நடத்திவரும் கொடையுள்ளம் கொண்ட மனிதரைப் பற்றியும் குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது.
- தா. கமலக்கண்ணன்,சென்னை.