

நான் ஒவ்வொரு முறையும் எனது படைப்புகளை ‘தி இந்து 'வுக்கு அனுப்பும்போதெல்லாம் இதை முதலில் யார் படிப்பார்கள்? யார் தேர்வு செய்வார்கள்? அப்புறம் அதை எப்படி வார்த்தைகள், வரிகள், பத்திகள் என்று அச்சடிப்பார்கள்? யார் இதை வடிவமைப்பார்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக யார் பிழை திருத்துவார்கள்? என்றெல்லாம் எண்ணிக்கொண்டேதான் அனுப்புவேன். ரொம்ப நாட்களாக என் மனதில் இருந்த எனது அத்தனைக் கேள்விகளுக்கும் பதிலாக இருந்தது
‘மாயா பஜாரி'ன் ‘இதுதான் என்னோட கதை'. வாசகர்களின் நாடித்துடிப்பை அறிந்தது போல வெளியிடப்பட்ட அக்கட்டுரையால் சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் பயனடைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
- ஜே. லூர்து,மதுரை.