

ஆவின் பாலில் நீர் கலந்து விற்கப்பட்ட செய்தி அறிந்து தமிழகமே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. அரசுத் தயாரிப்பின் நம்பகத்தன்மை காரணமாகத்தான் பெரும்பாலான பெற்றோர்கள் ஆவின் பாலைத் தங்கள் குழந்தைகளுக்குப் புகட்டுகிறார்கள். அந்தப் பாலில் தண்ணீர் (அதுவும் எந்தத் தண்ணீரோ) கலந்து விற்றிருக்கிறார்கள். குழந்தைகளின் உணவில் கலப்படம் செய்வது எப்படிப்பட்ட கொலை பாதகம்?
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.