

வாசிப்பின்மை, பெற்றோர் மத்தியில் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கைக்குப் போதுமானது என்ற எண்ணத்தால் வந்த விளைவு. நம் சமூகம் கல்வியைப் பணம் சம்பாதிக்க உதவும் கருவியாகத்தான் பார்க்கிறது. அறிவு என்பதைப் பாடத்திட்டத்தால் மட்டும் பெற முடியாது என்பதை உணரவில்லை. பெரும்பாலான வீடுகளில் பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்ட புத்தகத்தைப் படிப்பது குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு நூலை வாசிக்கும்போது அந்நூலாசிரியரின் வாழ்நாள் அனுபவத்தை நாம் பெற முடியும் என்பதை உணர்ந்தால் வாசிப்பு அதிகரிக்கும்.
- எஸ். கிரிஜா, மின்னஞ்சல் வழியாக…