

‘இந்தியர்களுக்கு இன்னொரு பாடம்' தலையங்கம் படித்தேன். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரிட்டனோடுதான் இருப்போம் என உறுதியாக நின்று, வென்று காட்டியிருக்கும் ஸ்காட்லாந்து மக்கள் உலகுக்கே ஒரு முன்னுதாரணம்.
இதே மனநிலைதான் உலக மக்கள் அனைவரிடமும் உள்ளது. நமது அண்டை நாடான இலங்கையில் உள்ள தமிழர் அமைப்புகள்கூட அண்மைக் காலமாக தனி ஈழம் தீர்வல்ல, ஒன்றுபட்ட இலங்கையில் அனைத்து உரிமைகளும் சமமாக வழங்கப்பட வேண்டுமெனத் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்தி உள்ளனர்.
ஆனால், அரசியல் பண்ணுகிறவர்கள்தான் ஒற்றுமைக்கு எதிரான பிரிவினைவாதத்தை விரும்புகின்றனர். தமிழ்நாட்டைக்கூட இரண்டாக, மூன்றாகப் பிரிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள், இந்த நிகழ்வின் மூலம் பாடம் கற்க வேண்டும்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.