

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம், மாணவர்களின் வசதிக்காகப் பாடங்களைத் தமிழில் விக்கிபீடியாவில் பதிவேற்றம் செய்யவிருப்பதாக ‘தி இந்து’வில் செய்தி வெளியானது, மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
தாய்மொழியில் பயிலும் மாணவர்கள் புரிந்துகொண்டு படிக்கிறார்கள் என்பதை எனது 30 ஆண்டு கல்லூரிப் பேராசிரியராக இருந்த அனுபவத்தில் கூறுகிறேன். விக்கிபீடியா பயன்பாடு மிக்க பலனைத் தரும்.
- ஜி. ராஜமோகன்,சென்னை.