

இந்த ஆண்டு ஐஏஎஸ் முடித்துவிட்டு முசௌரியில் பயிற்சியில் இருக்கிறேன். நான் ஐஏஎஸ் தேர்வை எழுதியது என்னுடைய தாய்மொழியான தமிழில்தான் என்பதில் எனக்குப் பெருமையுண்டு.
இதில், பொருளியலில் ஆரம்பித்து நிகழ்கால நடப்புகள் வரை பெரும்பாலான விஷயங்களில் எனக்கு ஆசானாக இருந்து உதவியது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்தான். ‘தி இந்து’வின் ஓராண்டுப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் அது என்கூடவே இருந்திருக்கிறது, அச்சு வடிவத்திலும், இணையவடிவத்திலும்.
ஆகவே, ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஓராண்டு நிறைவையொட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- வி.பி. ஜெயசீலன் ஐஏஎஸ்,
மின்னஞ்சல் வழியாக...