

‘பெண் இன்று’ பகுதியில் வெளியான ‘இவற்றில் ஆண்களின் பங்கு என்ன?’ கட்டுரை வாசித்தேன். பாலியல் தொழிலை மேற்கொள்ளும் எத்தனையோ பெண்கள் அவர்கள் விரும்பியா இந்த நிலையை அடைகிறார்கள்?
பொறுப்பில்லாத எத்தனையோ கணவன்களாலும், நோயாளித் தகப்பன்களாலும், ஊதாரிச் சகோதரன்களாலும், காதலித்து ஏமாற்றும் கயவன்களாலும்தான் இந்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அவர்களை இந்த வழிக்குச் செல்லத் தூண்டுகோலாக இருந்த ஆண்களுக்கு இந்தச் சமூகம் தரும் தண்டனை என்ன? பெண்களுக்கு மட்டுமே வரையறை வைத்துள்ள சமூகம், ஆண்களுக்கு என்று ஒரு சில விதிகளையாவது நிர்ணயித்துள்ளதா?
பெண்களை மதிக்க, பெண்களுக்கு மரியாதை கொடுக்க, பெண்களைச் சக தோழியாக எண்ண இன்னும் எத்தனை யுகங்கள் பிடிக்குமோ?
- தேஜஸ்,காளப்பட்டி.