

‘நீர், நிலம், வனம்’ தொடரில் ‘நீரிலிருந்து நிலத்துக்கு...’ கட்டுரையில் கொற்கைத் துறைமுகம்பற்றிய செய்திகளைப் படிக்கும்போது, தமிழரின் மாபெரும் துறைமுகம் மறைந்துபோனது மிகவும் சோகத்தைத் தந்தது.
பாடப் புத்தகங்களில் மட்டுமே படித்துவந்த துறைமுகத்துக்கு நம்மை நேரில் கொண்டுசேர்த்ததைப் போன்ற உணர்வினைத் தந்துவிட்டார் கட்டுரையாளர்.
மாபெரும் தமிழர் பண்பாட்டின் மிச்சமாக ‘பழமை வாய்ந்த துறைமுகம் கொற்கை’ என்ற வளைவுதான் வரலாற்றின் நினைவுகளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது.
- மு. மகேந்திர பாபு,கருப்பாயூரணி.