வாசகர் எதிர்பார்ப்பு

வாசகர் எதிர்பார்ப்பு
Updated on
1 min read

‘நீர், நிலம், வனம்’ கட்டுரைத் தொடர் மூலமாக, பரதவர் படும் பாடு உள்ளத்தைக் கசியச் செய்தது. கடலோடிகள் குபேர வாழ்க்கையை நாடவில்லை.

கடற்கரை ஓரத்தில் சிறு வீடுகள் அல்லது பெரும்பாலும் குடிசைகளில் வாழ்கின்றனர். கடலுக்குச் சென்றவர் கரை மீளும் வரை நிச்சயமற்ற வாழ்வு. வெறும் வலைகளோடு திரும்பவும் நேரலாம். விசைப்படகு உரிமையாளர்கள் பெரும் செல்வந்தர்கள்.

படகு பிடிக்கப்பட்டால் சிறைக்குச் செல்பவர் சாதாரண மீனவரே. படகு உரிமையாளர் வாழ்க்கை பாதிக்கப்படுவதில்லை. இக்கட்டுரைகள், மீனவர்பற்றிய நல்ல விழிப்புணர்வையும் புரிதலையும் தந்துள்ளன. நிலம் எப்போது வரும்?

இதுபோல பிற உழைக்கும் சமூகத்தினரது வாழ்க்கைபற்றிய கட்டுரைகளை வாசகர்கள் எதிர்நோக்குகின்றனர்.

- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in