

‘மாற்றங்கள்-ஏமாற்றங்கள்-வாய்ப்புகள்’ என்கிற டாக்டர் ஆர்.கார்த்திகேயனின் கட்டுரை படித்தேன். புதிய விஷயங்கள் ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றும். இருந்தாலும், மாற்றங்களால் ஏற்படும் பயன்களை நாம் உணரும்போதோ, அனுபவிக்கும்போதோ உண்டாகும் மகிழ்சிக்கு அளவேயில்லை.
கட்டுரையாளர் கூறியதுபோல காலத்துக்கேற்ற அதன் வளர்ச்சியை அறிந்து, அதற்கேற்றவாறு நாம் நம்மைத் தகவமைத்துக்கொள்ளாவிட்டால், காலம் நம்மைத் தூக்கியெறிந்துவிட்டு, அதுபாட்டுக்கு அதன் வழியில் போய்க்கொண்டே இருக்கும் என்பதுதான் நிதர்சனம். நாம் அப்போது, காற்றில் அடித்துச் செல்லப்பட்ட குப்பையைப் போல் ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று, அதன் பிரம்மாண்டத்தை ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான்!
- சி. பிரகதி, சென்னை-75.