

‘கண்களை ஏமாற்றிய காட்சிப் பிழை’ கட்டுரை வாசித்தேன். எந்தத் தொழில்நுட்ப வசதிகளும் இல்லாத அந்தக் காலத்தில் தங்கள் கற்பனைகளைக் காட்சிப்படுத்தி, ரசிகர்களை ஈர்த்தார்கள்.
ரவிகாந்த் நிகாய்ச் என்ற தொழில்நுட்பக் கலைஞர் அன்றைய படங்களில் தந்திரக் காட்சிகள் எடுப்பதெற்கென்றே சிறப்பு வல்லுநராக இருந்திருக்கிறார்.
அவர் பணியாற்றிய ‘பட்டணத்தில் பூதம்’ போன்ற திரைப்படங்கள் இன்றைக்கும் ரசனைக்குரியவையாகத் திகழ்கின்றன.
அதே போல் கேமரா மேதை என அழைக்கப்பட்ட கர்ணனும் தொழில்நுட்ப வசதிகளின்றி பல மாயாஜாலங்களைக் காட்டியிருக்கிறார். திரைக்குப் பின்னே நடப்பவற்றைச் சொல்லும் இந்தத் தொடர் ரசிக்க வைக்கிறது. முகம் காட்டாமல் பலரையும் வியக்க வைத்த ரவிகாந்த் நிகாய்ச்சின் புகைப்படத்தை ‘தி இந்து’ பிரசுரிக்க வேண்டும்.
- ஏ.எம். நூர்தீன்,சோளிங்கர்.