

‘கருத்துப் பேழை’ பகுதியில், செய்திகளாகிவிட்ட அதிர்ச்சிகள் என்ற வலைவாசக் கட்டுரை படித்தேன். எல்லாவற்றிலும் நாம் முன்னேறிக்கொண்டிருக்கின்றோம் என்பது குற்றச் செயல்கள் செய்வதிலும் நாம் முன்னேறிக்கொண்டிருக்கின்றோம் என்பதும் அடங்கிவிடுகிறது. முன்பு நாம் யோசித்துச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இப்போது செய்துவிட்டு யோசிக்கிறோம். மேல்நாட்டு நாகரிகம் வந்தபின்பு அனைத்தையும் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம்.
கூட்டுக் குடும்பத்தில் உணர்ச்சிகளை அடக்கத் தெரிந்து வைத்திருந்தோம். தனிக் குடும்பத்தில் உணர்ச்சிகளைத் திறந்து வைத்துத் திண்டாடுகிறோம். வன்புணர்ச்சி, ஆசிட் வீச்சு அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது நடந்துகொண்டிருந்தது. இப்போது ஊருக்கு ஊர் நடக்கிறது. நிதர்சன உண்மைகளைப் பட்டவர்த்தனமாகத் தெரிவித்துள்ளார் மணிகண்டன். பாராட்டுகள்.
- ஜீவன். பி.கே.,கும்பகோணம்.