

காமராஜரின் உண்மை, நேர்மை, எளிமை எல்லாமே இன்றைய ஆட்சியாளர்களின் எட்ட முடியாத உயரம்தான்.
இப்படியும் ஒருவர் இருந்தாரா என்று இளைய தலைமுறை வியப்படையும். என்னைப் போன்ற மூத்த குடிமக்கள் இப்போதைய ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைப் பார்த்து, காமராஜரை தினமும் நினைத்துக்கொள்வோம்.
இன்றைக்குச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கூடக் கட்சிக்கு அப்பாற்பட்ட சாமான்யர்கள் நேரில் பார்த்துத் தங்களின் நியாயமான குறைகளையோ அல்லது தங்கள் பகுதியின் குறைபாடுகளையோ எடுத்துரைக்க இயலவில்லை. என்று மாறும் இந்த நிலை?
- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.