

வற்றாத அலைகள் தழுவும் கடற்கரை மணலில் மனிதமும் இரக்கமும் இன்னும் வற்றிப்போகவில்லை என்பதை இருவரின் சரிதையும் படிக்கும்போதே உணர்த்திவிட்டார்கள் இருவரும், ‘நீர், நிலம், வனம்’ தொடர் மூலமாக. கண்களை இழந்தும் கட்டியவளுடனும் மூன்று பிள்ளைகளுடனும் குடும்பம் நடத்தும் முத்துமுனியன் முனியசாமி நெய்தல் நிலத்தின் நாயகனாகத் தெரிகிறார்.
எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தன் உயிரைப் பணயம் வைத்து, அடுத்தவர் உயிரை மீட்டுத் தரும் இயேசுபுத்திரனின் சேவையை நன்றி என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கொண்டு போற்றிவிட முடியாது.
- அத்தாவுல்லா,நாகர்கோவில்.