

‘நீர்… நிலம்… வனம்’ தொடரில், சாமி படங்களோடு இயேசு புத்திரனின் படத்தையும் மாட்டிவைத்து, ‘எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு’ எனும் குறளை, அசோக் ராணா எஸ்பி. நினைவூட்டுகிறார் என்றால், பிரதிபலன் பாராமல் பரிமாறப்படும் அன்புக்கு இணையாக அகிலத்தில் எதுவுமில்லை எனச் சொல்ல வைத்து, ‘அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்ற குறளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் இயேசுபுத்திரன் நெகிழத்தான் வைக்கிறார்.
- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.