

பெரும்பாலான ஊடகங்கள் சீனாவை ஒரு பயங்கர எதிரியாகச் சித்தரித்துவரும் இன்றைய இந்தியச் சூழலில், அத்தகைய வலிமையான எதிரியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எவையென்பதை, ‘உலகின் தொழிற்சாலை ஆகுமா இந்தியா?’
கட்டுரையில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார் இராமநாதன். மேம்பட்ட மனித வளத்துக்கு அடிப்படையான கல்வியையும் ஆரோக்கியத்தையும் புறந்தள்ளிவிட்டு உருவாக்கப்படும் இந்தியத் தொழிற்சாலை, தொழிலாளர்களை மேலும் பலவீனமாக்குவதுடன் அவர்களின் வாழ்க்கைத் தரத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். வலுவான மனிதவளத்தின் மீது கட்டப்படும் தொழிற்சாலையே சிறப்பாக அமையும்.
இந்தியாவை மிகப் பெரிய தொழிற் சாலையாக மாற்றும் அதே நேரத்தில், சுற்றுச்சூழலில் பாதிப்பு ஏற்படாதவாறு திட்டமிட வேண்டும்.
- மருதம் செல்வா,திருப்பூர்.