மசோதாவைத் தோற்கடிப்போம்

மசோதாவைத் தோற்கடிப்போம்
Updated on
1 min read

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடுகுறித்த தன்னுடைய கட்டுரையில் க.சுவாமிநாதன், ‘காப்பீட்டுப் பயனுக்காக ஏங்கும் ஒரு சாமானிய இந்தியரின் குரலைக் கேட்க மாட்டீர்களா? உங்களுடைய இயர்போனைச் சற்றே கழற்றுங்களேன்’ என்று இந்தியப் பிரதமர் மோடியை ஆதங்கத்துடன் கேட்டுள்ளார்.

இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களில் நவரத்தினமாக மின்னும் எல்ஐசி காப்பீட்டுத் துறை பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு ஏழு லட்சம் கோடிக்கும் மேல் திரட்டித்தந்துள்ளது என்பதை நினைவுபடுத்துகிறார். வெறும் வியாபாரம், லாபம் என்று பார்க்காமல், பொது நீரோட்டத்தில் விளிம்பு நிலை மக்களையும் இணைக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் கடந்த 57 ஆண்டுகளாக எல்ஐசி செயல்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். காப்பீட்டுத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு நேர்மையுடன் இருந்ததில்லை என்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்.

காப்பீட்டுத் துறையில் கூடுதல் அந்நிய முதலீட்டை 26%லிருந்து 49% ஆக உயர்த்துவதற்கு வழிகோலும் மாசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பதினாறாவது நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் இம்மசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்று, மசோதாவைத் தோற்கடிப்பார்கள் என்று நம்புவோம்.

- பெ.விஜயகுமார், முன்னாள் பொதுச் செயலாளர், மதுரை பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், மதுரை-18.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in