

புதன்கிழமை முதல் பக்கத்தில் வெளியான ‘4 மாநிலத்தில் புது ஆளுநர்கள்’ என்ற செய்தியில், ‘உத்தரப் பிரதேச பாஜக மூத்த தலைவர் கல்யாண்சிங் ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அவர்…’ என்று வந்திருக்கிறது. உண்மையில் அவர் உ.பி. முதல்வராக இருந்தவர்.
ஆனால், அவர் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் என்று பொருள்படும்படி அந்த வாக்கியம் அமைந்துவிட்டதே. ஏன் இந்த மயக்கம்?
- கே. பிரபு, திருத்தணி