

‘டான்ஸ் ஆடச் சொன்னாரா நீதிபதி? செய்தியில், ஒரு நீதிபதி ‘தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், தூக்கு தண்டனையும் ஏற்கத் தயார்’ என்று கூறியிருப்பது நகைப்புக்குரியது. ஒருவரது குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனையாகச் சட்டம் எதை நிர்ணயித்துள்ளதோ அதைத்தான் நீதிமன்றம் வழங்க இயலும். மேலும், குற்றவாளியே தனக்குரிய தண்டனையைத் தேர்ந்தெடுக்க முடியாது. இந்த வீர வசனங்கள் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரியது. ஒரு நீதிபதி பேசுவது ஏற்புடையதல்ல.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை-93.