

என் பெயர் எம். சுவாமிநாதன். எழுத்தாளர் மௌனிக்கு மகள் வயிற்றுப் பேரன். ‘தி இந்து’ நாளிதழில் வெளியான ‘மௌனி: தமிழின் வசீகரக் கனவு’(02.08.2014) என்ற கட்டுரையை மிகவும் ஆர்வத்துடன் வாசித்தேன். மொழியை மௌனி கையாண்ட விதம் பற்றிய அருமையான கட்டுரை அது.
சமீபத்தில் ஜெயகாந்தனின் பேட்டியொன்று ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது. அந்தப் பேட்டியில், தமிழில் தனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று மௌனியை அவர் குறிப்பிட்டிருந்தார். இப்படியாக, என்னுடைய தாத்தாவின் பெயர் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதுகுறித்தும், அவருடைய எழுத்துக்கள் இன்னும் தீவிரமாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருவதுகுறித்தும் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
- எம். சுவாமிநாதன், சென்னை.