

மூன்று நாட்கள்அதிகமாக பரோலில் தங்கியிருந்ததற்காகக் கூடுதலாக ஆறு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பரிதாபத்துக்குரிய இளைஞர் பற்றிய செய்தியைக் கண்டு மனம் நொந்துபோனேன். கைதிகளின் கடந்த காலக் குற்றங்களை மறந்து, அவர்களுடைய வாழ்க்கையில் வசந்தகாலம் மலர்ந்திட துணைசெய்யும் பொறுப்பில் உள்ள சிறை நிர்வாகம் இது போன்று கொடூரத்தன்மை மிக்கதாக மாறிப்போவது மனிதாபிமானமற்ற செயலே.
இன்னும் இதுபோன்று எத்தனை ஆயிரம் சோகக் கதைகள் நீண்ட நெடிய சிறை மதில்களுக்குள் தேங்கிக் கிடக்கின்றனவோ..! நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.
- கே.எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.