

‘பெண் இன்று' இணைப்பில் கவிதா முரளிதரன் எழுதிய ‘விவசாயத்துக்கு உயிரூட்டும் பெண் சக்தி' கட்டுரை படித்தேன். வருடம் ஒரு முறை மட்டுமே பயிரிட்டு, மற்ற நாட்களில் நிலத்தைத் தரிசாய்ப் போடும் நிலையை மாற்றி, மாற்று விவசாயத்தில் வெற்றி கண்ட பிரதிஸ்தா பெஹரே பற்றிப் படித்து வியந்தேன்.
விவசாயத்தில் நாட்டமில்லாத கணவனையும் விவசாயத்தில் முழு ஈடுபாட்டோடு செயல்பட வைத்ததும், குடிக்கு எதிராக பிரதிஸ்தா எடுத்துக் கொண்ட முயற்சிகளும் மற்ற பெண் களுக்குப் பாடமாக அமையும். பெயர் வாங்குவதற்குப் பணம், படிப்பு, பதவி மட்டுமே காரணம் என்ற மாயையை உடைத்து, புதிய சிந்தனை, முயற்சி, உழைப்பு என்ற மூன்று மட்டுமே வெற்றியை நிச்சயமாக்கும் என்பதை பிரதிஸ்தா சாதித்துக் காட்டியிருப்பதை சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்காக ‘முகங்கள்' பகுதியில் வெளியிட்டது மிகவும் பொருத்தமே!
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.