

ஊடகங்களின் பயன்பாடு இன்றியமையாதது என்று கருதி, வாழ்வில் தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இழத்தற்கரிய பொக்கிஷங்களை எல்லாம் இழந்துகொண்டிருக்கிறோம்.
இப்போதெல்லாம், பேருந்து நிறுத்தங்களில் நிற்பவர்களில் பாதிப் பேருக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், கண்ணெதிரே விரிந்துகிடக்கும் காட்சிகளையும் மனிதர்களையும் பார்க்காமல், கண்ணுக்கப்பால் உள்ள யாரோ ஒருவருடன் அப்படி என்ன முக்கியமான விஷயம்(?) பேசுகிறார்களோ, அதுவும் மணிக்கணக்கில்?!
வாஸந்தி எழுதியிருப்பதுபோல் ‘இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் பேச்சுக்காக ஏங்கப்போகிறோம்’ என்பது மிகப் பெரிய உளவியல் சிக்கலாக எல்லாத் தலைமுறையினரையும் பாதிக்கப்போகிற பிரச்சினை.
- மெய்யப்பன் சாந்தா, மதுரை