

மார்க்ஸியவாதிகள் மற்றும் இந்துத்துவவாதிகள் கையில் ‘வரலாற்று ஆய்வுக்கான இந்திய கவுன்சில் (ஐ.சி.எச்.ஆர்) சிக்கித் தவித்துவருவதை அருமையாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் குஹா. 1998-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, பாஜக வரலாற்றுத் திரிபு வேலைகளை அதிகாரபூர்வமாகவே தொடங்கிவிட்டது.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, வரலாற்று உண்மைகளை மறைக்கவும் முற்றிலும் பொய்யான தகவல்களை வரலாறாகத் திரிக்கவு மான முயற்சிகளைச் செய்யத் தொடங்கினார். 1. ஐ.சி.எச்.ஆர்., 2. ஐ.எஸ்.எஸ்.ஆர்., 3.ஐ.ஐ.எ.எஸ்., 4. யு.ஜி.சி., 5. ஐ.ஜி.என்.சி.ஏ., 6. என்.சி.இ.ஆர்.டி., போன்ற அமைப்பு களுக்கு ஆர்.எஸ்.எஸ்-காரர்களே தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். 1999-ம் வருடம், என்.எஸ்.இராசாராம், டாக்டர் நட்வர்ஜா ஆகிய இருவரும் ‘The Deciphered Indus Script’ என்ற நூலில் சிந்துச் சமவெளி நாகரிகத்தோடு ரிக் வேதத்தை இணைத்து, ரிக் வேதம் இந்தியாவில் தோன்றியது என்று நிலைநாட்டவும், அதன் மூலம் ஆரியர்கள் பிற்காலத்திய படையெடுப்பாளர்கள் என்ற உண்மையை மறைக்கவும், கற்பனைக் கதையை புகுத்தினர்.
இந்த மோசடி முயற்சியை ஹார்வர்டு பல்கலைக் கழக சமஸ்கிருதப் பேராசிரியர் மைகேல் விட் செல் மற்றும் வரலாற்று அறிஞர் ரோமிலா தாப்பர் மற்றும் சில ஆய்வாளர்கள் முறியடித்தனர். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் குதிரை இருந்ததாகத் திரிக்கப்பட்ட மோசடியும் அம்பலமானது.
- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு) மதுரை.