

தனிமனிதப் மனப்போக்கை அடிப்படையாகக் கொண்ட எந்தத் தேர்வு முறையும் ஏதாவது ஒரு வகையில் குற்றம் குறை கண்டிப்பாக இருக்கும். நீதிபதிகள் தேர்வுக் கூட்டமைப்பும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதே சமயம், புதிய சட்டமான, நீதிபதிகள் தேர்வுச் சட்ட ஆணையமும் தவறே நடக்காது என்று உத்தரவாதம் தரும் ஓர் அமைப்பாக உறுதியிட்டுக் கூற முடியாது. முன்பு, நீதிபதிகளின் ஆதிக்கம் என்றால், இனி அரசியல்வாதிகளின் ஆதிக்கம்.
ஓர் அரசியல்வாதி செய்த தவறு காரணமாகத்தான் நீதிபதிகள் தாங்களே தங்கள் தலைமையைத் தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவந்தனர். இனி, மீண்டும் முதலிலிருந்து... எங்கு போய் முடியும் இந்த வட்டம்?
- விளதை சிவா , சென்னை.