முன்வருவார்களா ஆண்கள்?

முன்வருவார்களா ஆண்கள்?
Updated on
1 min read

‘கு.க. சிகிச்சையில் பெண் மரணம்: மருத்துவர்களிடம் இன்று விசாரணை’- இந்தச் சம்பவத்தில் மருத்துவர் மீது தவறு இருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டும். வசதி குறைவான அந்தச் சிறிய மருத்துவமனையின் மருத்துவர்களைக் கட்டாயப்படுத்தி அறுவைச் சிகிச்சை செய்ய வைத்த அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும்.

மருத்துவர்களும் வசதி குறைவை எடுத்துச் சொல்லி அறுவைச் சிகிச்சை செய்வதை மறுத்திருக்க வேண்டும். பொதுவாகவே, ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சையைப் பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உயிரிழப்புகளும் மோசமான உடல் விளைவுகளும் பெண்களுக்குத்தான் அதிகம். அப்படியிருந்தும் பெண்களையே குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள வலியுறுத்தும் ஆண்களை என்னவென்று சொல்வது? இனியாவது ஆண்கள் இந்த அறுவைச் சிகிச்சையைச் செய்துகொள்ள முன்வருவார்களா?

- ராகம் தாளம், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in