Published : 06 Jul 2018 09:29 AM
Last Updated : 06 Jul 2018 09:29 AM

இப்படிக்கு இவர்கள்: செல்போன்களின் மாய உலகு

செல்போன்களின் மாய உலகு

கெ

ட்டுச் சீரழியும் சமூகத்தின் புரையோடிப்போன புண்களை ஆற்ற முயல்பவன்தான் எழுத்தாளன். ‘கோவேறு கழுதைகள்’ படைப்பின் மூலம் அறியப்பட்ட எழுத்தாளர் இமையம், செல்போன் கொடுமைகள் குறித்து ‘இந்து தமிழ்’ நேர்காணலில் பேசியுள்ளார். மனிதர்களின் இரண்டாம் இதயமாகவே மாறிவிட்ட செல்போன்களின் மாய உலகு எவ்வாறு இளைய தலைமுறையைச் சிதைக்கிறது என்று அழுத்தமாகச் சொல்லியுள்ளார். மறுக்க முடியாத உண்மை. தேவையோ.. தேவையில்லையோ பதின் பருவத்தில் உள்ள பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன்களை வாங்கித்தரும் பெற்றோர்கள் அவர்களின் அழிவுக்கு அடியெடுத்துத் தருகிறார்கள். அதிநவீன செல்பேசிகளின் வருகையும் இலவச இணையதள சேவையும் இன்று பலரையும் மனஅழுத் தம் உள்ளவர்களாய் மாற்றியுள்ளது. சில நொடிகள் இணையவேகம் குறைந்து போனால்கூட தாங்க முடியா அளவு மனச்சோர்வுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. ஏதேனும் கூட்டங்கள் நடந்தால்கூட அவற்றிலிருந்து விலகி, ஸ்மார்ட் போன்களின் செயலிகளுக்குள் நுழைந்து எதையாவது தேடிக்கொண்டிருக்கும் கவனமற்றவர்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றோம். நம் இனிய இரவுகளை இணையத்தில் தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டன.

தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறள் படிப்பதற்குப் பதில் நம் வீட்டையே எரித்துக்கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.

- சௌந்தர மகாதேவன்,

திருநெல்வேலி.

பிழைகளைத் திருத்துமா

பள்ளிக்கல்வித் துறை?

மீபத்தில் பள்ளிக்கல்வித் துறை புதிதாக வெளியிட்டுள்ள பாடநூல்கள் பாராட்டுக்குரியவை. எனினும், பழைய பாடநூல்களில் உள்ள தவறுகளும் களையப்பட வேண்டும். உதாரணத்துக்கு, ஏழாம் வகுப்பு முதல் பருவம் தமிழ்ப் பாடநூலில், 7-ம் பக்கம் ‘செம்மொழிகள் ஏழு’ என்ற பட்டியலில் எபிரேயம், ஈப்ரு என்று பிழை யாக அச்சிடப்பட்டுள்ளது. இரண்டும் வேறு வேறு மொழிகள் அல்ல. எபிரேயம் என்பது தமிழ் வடிவம். ஈப்ரு என்பது ஆங்கில வடிவம். இந்தப் பிழையை நீக்காவிட்டால், மாணவர்கள் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அடுத்த ஆண்டில் புதிய பாடநூல்கள் வந்துவிடுமே என்று அந்தப் பிழையை சரிசெய்யாமல் இருந்துவிடக் கூடாது.

- எஸ்.ரத்தினவேலு, சங்கரன்கோவில்.

இளமை உலா

வா

ராவாரம் ‘காற்றில் கரையா நினைவுகள்’ மூலம் நம்மை இளமைப் பருவத்துக்கு அழைத்துச் செல்கிறார் வெ.இறையன்பு. அன்வரும் அரவிந்தனும் அவரது நெருங்கிய பள்ளி நண்பர்கள் என்றால், ஒவ்வொருவருக்கும் அவர்களைப் போல் குறைந்தது இரண்டு நண்பர்களாவது இருப்பர். கட்டுரையைப் படிக்கும் போது எங்களை விட்டுப் பிரிந்த நண்பர்களின் நினைவுவந்து மனதைக் கனக்கச் செய்தது. இறையன்பு குறிப்பிட்டதைப் போல், ‘ஒவ்வொரு நல்ல நண்பரின் எண்ணையும் அலைபேசியிலிருந்து அகற்றுவதைவிடப் பெரிய சோகம் எதுவுமில்லை’. அலைபேசியிலிருந்து நண்பரின் எண்ணை அகற்றினாலும், மனதிலிருந்து நண்பரை அகற்ற முடியுமா என்ன?!

- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.

அறங்களில் சிறந்தது

ஜூ

லை - 4 அன்று வெளியான வி.சிவசுவாமி ஐயா நடத்தும் ‘கல்வி துணை’ மையம் பற்றிய கட்டுரையைப் படித்தேன். அவர் ஆரம்பித்த மையத்தின் சேவை மிகச் சிறப்பானது. நகரத்தில் படிக்கும் மாணவர்களைக் காட்டிலும் கிராமத்தில் படிக்கும் மாணவர்களின் நிலைதான் மிகவும் துயரம் மிக்கது. பெருந்தொகை கொடுத்து சிறப்பு வகுப்புக்குச் செல்ல முடியாத ஏழை மாணவர்களைக் கல்வியில் மேம்படச் செய்வது, மற்ற அறங்களைக் காட்டிலும் சிறந்த அறமாகும். இதில் சிவசுவாமியின் பங்கு மகத்தானது.

- முத்துசொக்கலிங்கம், கல்பாக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x