Published : 12 Jun 2018 10:14 AM
Last Updated : 12 Jun 2018 10:14 AM

இப்படிக்கு இவர்கள்: தாய்மொழி வழிக் கல்வியே சிறந்த கல்வி!

சிவ அய்யப்பன், இராசாக்கமங்கலம்.

தாய்மொழி வழிக் கல்வியே சிறந்த கல்வி!

ஜூ

ன் 7 நாளிதழில் வெளி யான பிரபா கல்விமணி யின் நேர்காணல், லட்சக்கணக்கான உள்ளங்களின் பெருங்குமுறலை, சொல்லத் தெரியாத அந்தப் பேரிழப்பைப் படி யெடுத்து வைத்ததுபோல் இருந்தது. கல்வி கார்ப்பரேட் கணக்குக்குப் பேசப்படுவதால், அது கோழிப்பண் ணைக் கல்வியாளர்களின் கொள் முதல் நிலையமாகிவிட்டது. அதில் தான் அவர்களின் வணிக மதிப்பீடும் அடங்கியுள்ளது. தாய்மொழிக் கல்வியை அவர் வலியுறுத்துவதில் எல்லா உண்மைகளும் அடங்கியுள் ளன. சிந்திக்கத் தெரியாத கூட் டத்தை அறுவடை செய்துகொண்டிருக்கும் சமூகம் கற்காலம் நோக்கியே செல்லும் என்பதை அவர் உணர்ந்துகொண்டிருப்பதால் அதை நமக்கும் உணர்த்துகிறார். விண்வெளிக்கு வெற்றிகரமாக முதன்முதலாகப் பறந்த யூரி ககாரினை வளர்த்தெடுத்ததெல்லாம் அவரு டைய தாய்மொழிக் கல்விதானே. உலகளாவிய தாக்குதலைச் சமாளிக்கச் சிறந்த கல்வி தாய்மொழிக் கல்விப் பாடத்திட்டம்தான்.. அதுதான் வேண்டும்.

ஆர்.முருகேசன், அந்தியூர்.

ஜனநாயக விரோத நடவடிக்கை

ஜூ

ன் 8 அன்று வெளியான ‘ஐஏஎஸ் தேர்வில் அரசு குறுக்கிடலாமா?’ என்ற கட்டுரையை வாசித்தேன். நெஞ்சம் கனத்தது. இந்தியாவின் ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வு மிகவும் முக்கியமானது. எவ்வித ஐயப்பாடுகளுக்கும் இடமளிக்காமல், சுதந்திரமான முறையில் இது வரையில் சிறப்பாக இது நடைபெற்றுவருகிறது. அதில் குழப்பத்தை ஏற்படுத்தவும், அரசியல் குறுக்கீட்டையும் அதிகாரிகளின் கண்ணசைவுக்குக் காத்திருக்கவுமான ஒரு மோசமான ஜனநாயக விரோத நடவடிக்கையை மத்திய அரசு கொண்டுவர முயற்சிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் சட்ட விதிமுறைக்கு மாறான மத்திய அரசு ஐஏஎஸ் மற்றும் குடிமைப்பணித் தேர்வில் மூக்கை நுழைக்க முயல்வது, ஐஏஎஸ் தேர்வு முறையில் அரசியல்செய்ய முயல்வதாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. இது நாட்டு நலனுக்கு உகந்ததல்ல.

கே.ராமநாதன், மதுரை.

மகத்தான பணி

ண்ணங்களால் மிளிர்ந்து, கவர்ச்சியாகக் காட்சி தரும் மும்பை குடிசைப் பகுதி பற்றிய செய்தியும் படமும் அருமை. அங்கு வாழும் மக்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் விதத்தில் அப்பகுதியை மாற்றி அமைத்திருக்கும் தன்னார்வலர்களின் சமூகப் பொறுப்புணர்ச்சி மகத்தானது. இதே வழியில் குடிசைப் பகுதிகளின் சுற்றுச் சூழலை மேம்படுத்தும் பணியும் தொடர்ந்தால் நல்லது!

ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

பெருமை பெறுகிறது கும்பகோணம் நகராட்சி

ஜூ

ன் 9-ம் தேதியிட்ட இந்து தமிழ் நாளிதழில் ‘இந்தியாவிலேயே முதன் முறையாக 3 ஆண்டுகளில் அகற்றப்பட்ட 2 லட்சம் டன் குப்பை’ என்கிற கட்டுரை படித்தேன். கும்பகோணம் நகராட்சி செய்துள்ள இந்தச் சாதனையைப் படிக்கும் மற்ற நகராட்சி, பேரூராட்சிகளும் இதைப் பின்பற்ற வேண்டும். குப்பையைத் தரம் பிரித்து, மறு சுழற்சிக்காக வெளியூர்களுக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உறுதிசெய்யும் நடவடிக்கையை கும்பகோணம் நகராட்சி மேற்கோள்வது பெருமையளிக்கிறது. தூய்மை இந்தியா திட்டம் நன்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x