

ஒரு முறை வினோபாஜியை ரசிகமணி சந்தித்தபோது கம்பராமாயணத்தின் இரண்யவதைப் படலப் பாடலை அவருக்கு விளக்கிச் சொன்னாராம். அதைக் கேட்டு அதிசயித்த வினோபாஜி, ‘நீ சொன்ன சொல்லிலும் உளன்' என்ற சொல்லாட்சி இந்திய ராமாயணங்கள் எதிலும் இல்லை என்று புகழ்ந்தாராம்.
கம்பனின் பெருமையை வேற்று மொழிக்காரர்களும் ரசிக்கும் வகையில் புரிய வைத்துள்ளார் ரசிகமணி . நம் பெருமையை நம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை என்னும் ஆதங்கம் கட்டுரை ஆசிரியரிடம் தெரிகிறது. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.
- இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.