

அங்கீகாரம் மறுக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகியின் முறையீடுகளை உயர் நீதிமன்றம் தக்க நியாயங்களைக் கூறி நிராகரித்துள்ளது. அக்கல்லூரி மாணவர்களின் நிலை மேம்போக்கில் பார்த்தால் பரிவுக்குரியதுபோலத் தோன்றும்.
அங்கீகாரம் பெறாத கல்லூரியில் பெரும் நன்கொடை கொடுத்துச் சேர்ந்த பின், நிர்வாகம் பொறுப்பேற்கும் என்று எதிர்பார்த்தனர். எவ்வித உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத கல்லூரியில் பொழுதைக் கழித்துவந்த மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளவோ தம் கல்லூரியை ஏற்கவோ போராடுவது நியாயத்தின் அடிப்படையில் அல்ல.
அவர்கள் அரசுக் கல்லூரிகளில் சேர முற்படாதவர்கள் அல்லது அதற்குத் தகுதி பெறாதவர்கள். அந்த மாணவர்களைவிட அதிக மதிப்பெண் பெற்ற பலரும் இடம்மறுக்கப்பட்டிருப்பார்கள். இந்த மாணவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் கொடுக்க முற்பட்டால், அதிக மதிப்பெண் பெற்ற பிற மாணவர்கள் நீதிமன்றத்தை அணுகுவார்கள்.
இது முடிவில்லாப் போராட்டமாகவே இருக்கும். தாங்கள் செலுத்திய நன்கொடையைத் திரும்பப்பெற முயல்வதே விவேகமாகும்.
- ச.சீ. இராஜகோபாலன், சென்னை.