Published : 14 Jun 2018 09:54 AM
Last Updated : 14 Jun 2018 09:54 AM

இப்படிக்கு இவர்கள்: என்ன சொல்வது என்றே தெரியவில்லை

நீ.சு.பெருமாள், பரமக்குடி.

என்ன சொல்வது என்றே தெரியவில்லை

பொ

துத்துறை வங்கிகளின் நஷ்டம் செய்தி படித்தேன். கடந்த டிசம்பர் நிலவரப்படி, இந்திய வங்கித் துறையின் மொத்த வாராக்கடன் 8 லட்சத்து 31 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது என்கிற தகவல் அதிர்ச்சியளிக்கிறது. விலையாகிப் போன உயர் கல்வி கற்பதற்கு மாணவர்களுக்கு வழங்கும் கல்விக் கடனைச் செலுத்துவதற்குத் தாமதமானால், பின்தொடர்ந்து பலி வாங்குகிறார்கள். மாணவனின் ஆதார் அட்டை மூலம், இந்தியா வில் உள்ள எந்த வங்கியிலும் கடனைப் பெற முடியாத சூழலை உருவாக்குகிறார்கள்.

ஆனால், தொழிலதிபர்களோ பல வங்கிகளில் கடனைப் பெற்று, அதனை வாராக்கடனாக்கிவிட்டு, பத்திர மாக நாட்டைவிட்டும் சென்றுவிடுகிறார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,578 கோடி ரூபாய் கடன் பெற்ற நீரவ்மோடி தப்பித்துச் சென்றுவிட்டார். விஜய் மல்லையா கூடுதல் உதாரணம்.

இதில் வேதனை என்னவெனில், வங்கிகளை மேம்படுத்த அமைக்கப்பட்ட குழு வாராக்கடன்களை எப்படி வசூல்செய்வது எனத் திட்டமிடப்போகிறதாம். இந்தக் குழுவுக்குத் தலைவராக பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் சுனில் மேத்தா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். பணத்தைப் பறிகொடுத்த வங்கியின் தலைவருக்கு, வாராக்கடனை வசூலிக்கும் வழிகள் தெரிந் திருக்கும் என்பதாலா அல்லது.. என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ப.பா.ரமணி, கோவை.

சிறந்த எடுத்துக்காட்டு

தி

ருப்பூர் கவிதாலட்சுமி நகர் தொடக்கப் பள்ளியின் வெற்றிக் கதை மனநிறைவளிக்கிறது. மூடப்படும் நிலையிலிருந்த பள்ளியை முன்மாதிரிப் பள்ளியாக மாற்றிய சாதனையை பெற்றோர் - ஆசிரியர் சங்கம் சாதித்துள்ளது. ஏழை எளிய மக்களுக்குக் கல்வி கிடைத்திட இத்தகைய சமூக அக்கறை எல்லா இடங்களிலும் உருவாக வேண்டும். மாநிலம் எங்கும் ஆங்காங்கு தென்படும் இத்தகைய நன்முயற்சிகளை வெளிப்படுத்தி வருவதன் மூலம் தமிழ் இந்து நாளிதழ் சமூகத்துக்கு ஆற்றிவரும் பணி மகத்தானது.. நன்றி!

சிங்காரம், குடந்தை.

கல்வித் துறை மேன்மை பெறும்

மைச்சர்கள், அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசுக் கல்வி நிறுவனங்களில் சேர்த்துப் படிக்கவைக்க வேண்டும். இதனால் பள்ளி மேலாண்மைக் குழு முழு அதிகாரத்துடன் செயல்பட்டு, தரம்மிக்க கல்வி அனைவருக்கும் கிடைக்க வழி ஏற்படும். அரசுக் கல்வி நிறுவனங்கள் மீது மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டு, தங்கள் பிள்ளைகளையும் சேர்த்துப் படிக்க வைப்பார்கள். தமிழகக் கல்வித் துறை மேன்மை பெறும்.

ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.

பயன்பாட்டைத் தவிர்க்கலாம்

டுத்த தலைமுறைக்கு நல்ல சுற்றுச்சூழலைக் கொடுக்கும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு. பிளாஸ்டிக்கை அழிக்க முடியாவிட்டாலும், பயன் படுத்துவதையாவது தவிர்க்கலாமே! சங்க இலக் கியத்தை மொழியியலோடும் மக்கள் வழக்கோடும் இன்றைய சூழலோடு பொருத்திப் பார்க்கும் தரமான கட்டுரைகள் கலைஞாயிறு பகுதியில் தொடர்ந்து வெளிவர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x