

காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வெல்பவர்களுக்குத் தமிழக முதல்வர் பரிசுத்தொகை வழங்கிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. இது மேலும் நம் விளையாட்டு வீரர்களை ஊக்கப் படுத்தும்.
இதேபோன்று தமிழக மீனவர் கள் பிரச்சினையில் தொடர்ந்து மத்திய அரசுடன் போராடி வரும் தமிழக முதல்வர், ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள நிலையில் மனம் பதறி, ‘தற்கொலை என்பது கோழைத்தனம்; வாழ்ந்து சாதிப்பது புத்திசாலித்தனம்’ என்று குறிப்பிட்டு, கடிதம் எழுதியிருப்பது நெகிழ்வாக உள்ளது.
- க. அன்பழகன், தஞ்சாவூர்.