

‘எண்ணிக்கை மட்டுமே தகுதியா?’ என்ற தலையங்கம் பிரதமருக்கும் அவரது கட்சியினருக்கும் ஓர் எச்சரிக்கை கலந்த அறிவுரை. தொடக்கத்தில் பரந்த மனம் கொண்டவர்போல் தன்னைக் காண்பித்துக்கொண்டார் மோடி. ஆனால், ஆளுநர்கள் விடுவிப்பிலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் மத்திய அரசின் நடவடிக்கை அதிருப்தியளித்தது. இப்போது மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் அங்கீகாரம் பற்றிய விவகாரத்திலும் மௌனம் சாதிக்கிறார். எதிர்க் கட்சி இல்லாமல் செயல்படுவது என்பது, எதேச்சதிகார எண்ணங்கள் தலைதூக்கச் செய்யும்.
எனவே, காலம் தாழ்த்தாது எதிர்க் கட்சிப் பொறுப்பை காங்கிரஸ் கட்சிக்குத் தந்து, பிரதமர் தனது பாரபட்சமின்மையை வெளிப்படுத்த வேண்டும்.
- மாலரசன், கும்பகோணம்.