Published : 08 Jun 2018 09:07 AM
Last Updated : 08 Jun 2018 09:07 AM

இப்படிக்கு இவர்கள்: பள்ளிகளின் அருமை!

நா.மணி,

மின்னஞ்சல் வழியாக..

பள்ளிகளின் அருமை!

டிப்பு என்பது நிகழ் காலத்தைத் தவறவிட்டு, எதிர் காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செய்யப்படும் திட்டமிட்ட முதலீடு. இன்றைய கல்வி முறைக்கு இதைவிடச் சிறந்த இலக்கணம் யாராலும் கூற இயலாது. ஏன் ‘கல்வி இவ்வளவு பெரிய வணிகப் பொருள் ஆனது.. ஏன் கல்வியின் மாண்புகள் காற்றில் பறந்தன?’ என்பன போன்ற பல கேள்விகளுக்கு இந்த இலக்கணத்துக்குள் பதில் இருக்கிறது. மீண்டும் பொதுப் பள்ளி, அருகமைப் பள்ளி அமையாமல் உண்மையான கல்வி மலராது. இறையன்புவின் தொடரில் வரும் ‘பள்ளிக்கூடம் போகலாம்’ கட்டுரை காற்றில் கரையாத நினைவுகள் அல்ல; காற்றில் கரையக் கூடாத நினைவுகள்!

பாலுச்சாமி, பட்டாபிராம்.

நம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம்!

மா

ணவர்களின் செயல்திறனில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கப்போகும் புதிய பாடநூல்கள் குறித்த பேராசிரியர் ச.மாடசாமியின் கட்டுரை சொல்வதுபோல, குழந்தைகளோடு இயைந்து நடந்து, அவர்களுக்குள் உறைந்துகிடக்கும் புதிய உலகங்களை உயிர்பெறவைக்க வகுப்பறைதோறும் மனித முகங்களாக மலர வேண்டும். மாற்றங்களை நோக்கிய புதிய பாடநூல்களின் வெற்றி அப்போதுதான் சாத்திய மாகும். தம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க அனைத்துப் பெற்றோர்களையும் ஊக்குவிக்க அரசும், சமூகச் செயல்பாட்டாளர்களும் இணைந்து முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

சோமசுந்தரம் ஷண்முகசுந்தரம், கோவை.

புத்தகங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மாக்கள்!

ஜூ

ன் - 2 அன்று வெளியான ‘பத்தாயிரம் புத்தகங்களுடன் ஒரு வாழ்க்கை’ என்கிற கட்டுரை வாசித்தேன். புத்தகங்கள் என்பவை வாசித்தவுடன் கடந்துபோகக் கூடியவை அல்ல. அதனால்தான், ஒவ்வொரு பக்கத்திலும் இருக்கும் எழுத்தாளனின் ஆன்மாவைக் கண்டடையும் முயற்சியாக நினைத்து வாசிக்கிறாரோ பா.லிங்கம். அவருடைய அபாரமான இந்த வாசிப்பு, மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.

விளதை சிவா, சென்னை.

நம்பிக்கையற்றவர்களின் செயல்

மிழ்நாட்டு பிம்ப அரசியலின் நீட்சியாக, ரஜினியின் அரசியல் பிரவேசமும் அதன் வெளிப்பாடாக எழுந்த அவருடைய சர்ச்சைக்குரிய கருத்துகளாலும், ரஜினியின் ‘காலா’ திரைப்பட வெளியீடு எதிர்ப்பும் ஆதரவுமாகக் காரம் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அவருடைய அரசியல் கருத்துக்குச் சரியான முறையில் பதில் சொல்லாமல், படத்துக்குப் பிரச்சினைகளை உருவாக்குவது, எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பட வெளியீட்டுப் பிரச்சினைகளை நினைவுகூர்கிறது. ‘நீங்கள் கூறிய கருத்தை நான் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், அக்கருத்தைச் சொல்வதற்கான உங்கள் உரிமையை என் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பேன்’ என்று மேல்நாட்டு்ச் சிந்தனையாளர் எஸ்.ஜி.டேலன்டைர் கூறியதைப் போல, ரஜினியின் கருத்துக்காக அவர் படத்துக்குத் தடைகோருவது என்பது ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கையற்றவர்களின் செயல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x