

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டினை உயர்த்தினால் என்ன என்று நினைக்கும் என் போன்றோருக்கு சுவாமிநாதனின் கட்டுரை பல்வேறு புதிய தகவல்களைத் தந்துள்ளது.
அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாயை மக்களிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் எல்ஐசி நிறுவனம், ஊழலற்ற நேர்மையான செயல்பாடுகளால் சிறந்து விளங்குகிறது, ‘வாழும் போதும்... வாழ்க்கைக்குப் பிறகும்’ என்ற தனது விளம்பரத்தில் வரும் வாசகத்தினைப் போல் உண்மையில் செயல்படும் எல்ஐசி இருக்க, அந்நிய முதலீடு எதற்காக என்ற கட்டுரையாளரின் கருத்து மிகச் சரியானது. தேசத்தின் நலனை விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் அரசின் இம்முடிவை எதிர்க்க வேண்டும்.
- பி.எஸ். சுபா, கோவை