

மணி எனும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மெளனியைப் பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவர், கடைசிவரை வேலைக்குச் செல்லவில்லை. ஆங்கிலவழிக் கல்வி பயின்ற அவர், தமிழ் மொழியின் புதிய பரிமாணத்தைத் தன் எழுத்தில் கொண்டுவந்தார். படைப்பின் உள்ளடக்கத்தைக் காட்டிலும் மொழிக்குத்தான் மெளனி அதிக முக்கியத்துவம் தந்தார் என்பது தெளிவான உண்மை.
‘‘கவியாகப் பிறந்திருக்க வேண்டியவர். தப்பித்தவறி வசன உலகுக்கு வந்துவிட்டார். மெளனி கதை மாந்தர்களை உணர்ச்சிவயத்தோடு விளக்குவார். இவ்வகை உணர்வுக்கு வாசிப்பாளனும் ஆட்பட்டுவிடுகிறான். அதனால்தான் அவர் மொழிக்குத் தரும் முக்கியத்துவத்தைக் கதைகளுக்குத் தரவில்லை” எனும் சி.சு. செல்லப்பாவின் வரிகள் அதை நன்கு உணர்த்துகின்றன.
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்