

‘பெண் நீதிபதிக்கு காதல் கடிதம் - குற்றவாளிக்கு எச்சரிக்கை' செய்தி படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடிதம் எழுதினார் என்பதைத்தான் பெண் நீதிபதி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது, நீதிபதி சொன்ன ‘லவ் லெட்டர்’என்பது ‘சிங்கிள் கோட்’(மாறுபட்ட) பொருள் கொண்டது.
வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினால் இதைக் கிண்டலாக ‘காதல் கடிதம்' என்று நீதிபதிகள் குறிப்பிட்ட உதாரணங்கள் இதற்கு முன்பும் உண்டு.
-வி.கே.ராமானுஜம், வேலூர்.