

சென்னை பள்ளி மாணவர்களின் வெற்றிக்குக் கூட்டு முயற்சியே காரணம் என்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகியின் கருத்தை வெளியிட்டுள்ளீர்கள். பாலாஜியின் பணியினால் மட்டும் இந்தப் பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்களைப் பெற்றிருக்க மாட்டார்கள் என்பது அவருக்கும் தெரியும். அவர் ஒரு முழு நேர ஆசிரியர் அல்ல.
வருவாய்த் துறையில் தாசில்தாராகப் பணி புரிபவர். தன்னுடைய அலுவலகப் பணிகளுக்கிடையே மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கில், இலவசமாகச் சமுதாயப் பணியாற்ற முன்வந்தவரைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, குறை சொல்ல வேண்டாமே! வெற்றி என்பது கூட்டு முயற்சிதான். பாலாஜி அதற்கான விதையை அல்லவா விதைத்துள்ளார்.
- பி.கே. ஜீவன், கும்பகோணம்.