

தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றின் முக்கிய நோக்கமே வடிகட்டுதலாகும். ஒரு இடத்துக்குப் பலர் போட்டியிடும்போது, விலக்குவதற்கான கருவிகள்தான் இப்போட்டிகள். இத்தேர்வுகளை எதிர் கொள்வோரிடம் சமநிலை கிடையாது என்பது யதார்த்தம்.
முதல் தலைமுறையாகப் படித்தவர், பெற்றோரது கல்வி, சமூகப் பொருளாதார நிலை, ஆயத்த வகுப்புகளுக்குச் செல்லல், பயிற்சி நூல்கள் போன்ற பல காரணிகள் சமமின்மையை வெளிப்படுத்தும். நகர்ப்புறத்தில் வாழும் கற்றறிந்த குடும்பத்திலிருந்து வருபவர்களுக்கு ஒரு தொடக்க லாபம் உண்டு. தொடக்கக் கல்வியினின்று அனைவர்க்கும் தரமான கல்வியை உறுதிசெய்வது ஓரளவுக்குச் சமமின்மையின் வீச்சைக் குறைக்கும். ஆனால், கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகினும் தரமான கல்வி அளிக்க அரசுகள் தவறி விட்டன. அத்தவறுகளுக்குப் பலிகடாக்கள் ஆவது இளைஞர்களே.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை-93.