Published : 17 May 2018 08:25 AM
Last Updated : 17 May 2018 08:25 AM

இப்படிக்கு இவர்கள்: அபத்தத்தின் உச்சம்!

இரா.முத்துக்குமரன்,

குருங்குளம்

மேல்பாதி.

அபத்தத்தின்

உச்சம்!

‘ஆ

டுகளைப் போல் 200 ஆண்டுகள் பிழைப்பதைவிட, புலியைப் போல் இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்’ என முழங்கிய திப்பு சுல்தான் மீது தங்கள் அரசியல் சுய லாபத்துக்காக, வரலாற்று உண்மைகளைத் திரித்துக் கூறும் நோக்கம் ஏற்புடையதல்ல. இந்திய சுதந்திரத்துக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளில் பலவும் தேச விடுதலைக்கானவையே. அந்நிகழ்வுகளுக்கான உத்வேகத்தைக் கொடுத்ததில் முன்னணிச் செயல்வீரனாகச் செயல்பட்ட திப்பு சுல்தானின் வரலாற்றைத் திரித்துப் பேசுவது, அபத்தத்தின் உச்சம். 49 வயதில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர மரணம் எய்தவனை சொகுசு வாழ்க்கை வாழும் இன்றைய சுயநல அரசியல்வாதிகள் விமர்சிப்பது சரியாகுமா? ‘தேர்தல் ஆயுதங்களா வரலாற்றுத் தரவுகள்?’ கட்டுரை உணர வேண்டிய தொகுப்பு!

ஆர்.பிச்சுமணி, திப்பிராஜபுரம்.

முன்மாதிரித் தலைவர்கள்

டம்பர அரசியல் கொடிகட்டிப் பறக்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை அரசியல் களத்தில் புக விரும்புவர்கள் உணர்ந்து நடப்பது மிக முக்கியம். மகாத்மா காந்தியின் அகிம்சாவழிப் போராட்டம், நேருவின் பஞ்சசீலக் கொள்கை, லால் பகதூர் சாஸ்திரியின் ‘ஜெய்கிஸான், ஜெய் ஜவான்’ கொள்கை, சமஸ்தானங்களை ஒன்றிணைத்த படேலின் செயல், மதுவை அடியோடு ஒழிக்க பாடுபட்ட ராஜாஜி, ஏழைகளின் கல்விக் கண்ணைத் திறந்த காமராஜர் போன்ற எண்ணற்ற தன்னலமற்ற தலைவர்களை முன்மாதிரியாக கொண்டு செயல்படுவது அவசியம். பகட்டான அரசியலை ஒதுக்கிவிட்டு எளிமையான, தூய்மையான, மனித நேயம்மிக்க பண்பட்ட அரசியலைப் படைக்க முன்வரும் புதிய தலைவர்கள் உருவாவது நாட்டுக்கு நல்லது.

கு.மா.பா.கபிலன், சென்னை.

உரக்க ஒலிக்கும் விசில் சத்தம்!

க்கள் நீதி மய்யத்தின் சார்பில், இரண்டு வாரங்களுக்கு முன்பு அதன் தலைவர் கமல்ஹாசனால் தொடங்கி வைக்கப்பட்ட ‘மய்யம் விசில்’ செயலியைப் பத்தாயிரம் பேர் தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்துள்ளார்கள் என்ற தகவலைப் படித்து, ஆனந்தம் அடைந்தேன். நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் அசம்பாவிதங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதை அன்றாடச் செய்தித் தாள்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். அவற்றைத் தடுக்க அல்லது குறைக்க என்ன வகையில் பங்காற்றலாம் என ஆய்ந்து, மக்கள் நீதி மய்யம் ‘விசில் செயலி’யைத் தொடங்கியது. அதில் ஏராளமான புகார்கள் வந்து குவிகின்றன. ஆய்வுக் குழு மூலம் புகார்களின் உண்மைத் தன்மை ஆராயப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி, தீர்வு காண வழிவகை செய்யப்படும் என்பதால், மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. விசில் சத்தம் உரக்க ஒலிக்கும் என்பதை நம் எல்லோராலும் நன்கு உணர முடிகிறது.

கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.

மனிதன் எதை நோக்கிப் பயணிக்கிறான்?

மே

15 அன்று வெளியான ‘காட்டுயிர்களுக்கு எமனாகும் காற்றாலைகள்’ பற்றிய கட்டுரை படித்தேன். காடுகளையும் காட்டுயிர்களையும் அழித்துவிட்டு, மனிதன் எதை நோக்கிப் பயணிக்கிறான் என்ற கேள்வி எழுகிறது. வனமும் வனம் சார்ந்து வாழும் பல்லுயிர்களும் உயிரினங்களிடையே உள்ள இயற்கையான உணவு வலை. இச்சூழல் சிதைக்கப்படும்போது உணவுச் சங்கிலியில் மாற்றங்கள் உண்டாகி, அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தும். காற்றாலைகள் மின் உற்பத்திக்குத் தேவையானதாக இருப்பினும், இது அமையும் இடங்களில் வனமும் வன உயிரினங்களும் பாதிப்புக்கு உள்ளாவது வேதனையடையச் செய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x