Published : 25 May 2018 08:49 am

Updated : 25 May 2018 08:49 am

 

Published : 25 May 2018 08:49 AM
Last Updated : 25 May 2018 08:49 AM

இப்படிக்கு இவர்கள்: அநீதி

இரா.கிருபாகரன், துறைமங்கலம்.

அநீதி

மே

22 அன்று வெளியான ‘ஐஏஎஸ் கனவு கள் மீது ஒரு தாக்குதல்’ என்ற கட்டுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேவைப் பணியில் சேர்ந்த பின்பு நிறைய அரசியல் இருக்கும். ஆனால் இங்கு குடிமைப் பணியே அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணித் தேர்வு ஒன்றும் அவ்வளவு எளிதானது இல்லை. அப்படி இருக்கும்போது கடினமான இத்தேர்வில் வெற்றிபெற்று பயிற்சி மையத்தில் பயிலும் போது அடக்குமுறையால் அநீதி இழைக்கிறது அரசு. இந்த முடிவு பணத்தால் ஆன ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். அரசுத் துறையில் தனித் திறன்களை மேம்படுத்த வேண்டிய அரசு, பயிற்சி மையத்தில் இத்தகைய மனப்பாங்கை விதைப்பது அநீதி.

அ.அப்துல் ரஹீம், காரைக்குடி.

காவல் துறையின் அராஜகப் போக்கு

தூ

த்துக்குடியில் தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உயிர் பலி வாங்கிய செயல் ஆளும் வர்க்கத்தின் அடாவடித் தனம். போராட்டம் தொடங்கி பல நாட்களைக் கடந்தும், எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. காவல் துறையின் அராஜகப் போக்கு, யாரையோ திருப்திப்படுத்த நடந்துகொண்ட மாதிரியான எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது.

பா.குமரய்யா, சென்னை.

முகமற்றவர்களின் குரலாக..

சூ

ர்யாவின் ‘போராட்டங்கள் ஏன் கலவரங்களாகின்றன?’கட்டுரையைப் படித்தேன். மக்கள், போராட்டங்களில் இறங்குவதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கு வழி காணாமல், அவற்றை வளர்த்தெடுத்து ஆதாயம் தேடுவதே வழக்கமாகிவிட்டது. தங்கள் வாழ்க்கையைத் தற்காத்துக்கொள்ள தினமும் ஆயிரம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் எண்ணற்ற, முகமற்ற மக்களின் குரலை கட்டுரை எதிரொலிக்கிறது.

ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

வைரஸின் கொடூரம்

மே

23-ம் தேதியிட்ட நாளிதழில், ‘உயிர்த் தியாகம் செய்த கேரள நர்ஸ் லினி’ என்கிற செய்தி படித்தேன். ‘நிபா’ வைரஸ் காரணமான அவரின் மரணம் கொடூரமானது. தாயற்ற இரு குழந்தைகளின் எதிர்காலம் அச்சமூட்டுகிறது. இறந்த பின் அவரது முகத்தைக்கூடப் பார்க்க இயலாதது பெருங்கொடுமை. மருத்துவத்தில் இந்தியா கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

சி.ஆர்.நாராயணன், கடலூர்.

தூய வாழ்வின் சான்று

செ

லமேஸ்வரர் பற்றிய கட்டுரை (மே 21) நேர்த்தியாக இருந்தது. துணிச்சலுடனும், தன் மனசாட்சிக்கு எது நேர்மை என்று பட்டதோ அதை யாவரும் அறியச்செய்து, நாட்டுமக்களின் மதிப்பைப் பெற்றார். நீதிக்காகப் போராடும் மக்களுக்குப் புகலிடமான உச்ச நீதிமன்றத்தின் மாண்பை நிலைநிறுத்த எடுத்த நடவடிக்கை, அவரது தூய வாழ்க்கை யின் சான்று.
Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x