Published : 11 May 2018 08:48 AM
Last Updated : 11 May 2018 08:48 AM

இப்படிக்கு இவர்கள்: வீராங்கனை ரோசா

ப.பா.ரமணி,

கவுண்டம்பாளையம், கோவை.

வீராங்கனை ரோசா

.வெண்ணிலா எழுதிவரும் ‘மரணம் ஒரு கலை' வரலாற்றுத் தொடரில் ‘சிவப்பு ரோசா லக்சம்பர்க்’ பற்றிய பதிவு உருக்கமாக இருந்தது. ஜெர்மனி ராணுவப் படையினரால் அடித்தே கொல்லப்பட்டார் ரோசா. எங்கே ரஷ்யாவில் வெடித்த சோஷலிசப் புரட்சியை ஜெர்மனிக்குள்ளும் கொண்டுவந்துவிடுவாரோ என்றுதான் அவரைக் கொன்றது சர்வாதிகார அரசு. கம்யூனிச லட்சியத்தின் வெற்றிக்காகத் தீவிரமாகப் போராடியவர் ரோசா லக்சம்பர்க். கிளாரா ஜெட்கின், அலெக்சான்ட்ரா கொலந் தாய் மற்றும் குரூப்ஸ்காயா போன்று பெண்ணுரிமைக்கு முதலிடம் கொடுக்கவில்லை. எனினும், சோஷலிஸத்தில் பெண் விடுதலை சாத்தியப்படும் என்று உறுதியாக நம்பியவர் அவர்.

ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

சாதி அரசியல் நல்லதா?

மே

10 அன்று வெளியான ‘தளைகளிலிருந்து விடுதலை பெற வைக்குமா சாதி அரசியல்?' கட்டுரை கற்பனைகள், அனுமானங்கள் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பிஹார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆதிக்க சாதியினரான பிராமணர்களின் ஆதிக்கத்தை வீழ்த்திவிட்டு பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட சாதியினரை முன்னிலைப்படுத்தி ஆட்சியைப் பிடிப்பதற்கு சாதி அரசியல் துணை போயிருக்கலாம். ஆனால், பிற்பட்ட சாதிகள் ஆட்சியில் அமர்வதையே அரசியலில் பெரும் வெற்றியாகக் கருத முடியாது. பெரும்பான்மை ஆதிக்க சாதியினர் பிடியில் இருக்கும் தமிழக அரசியலில் தலித் அரசியல் உச்சத்தில் செல்லுவதும், சிறிய அளவிலான சாதியினர் பதவிக்கு வருவதும் குதிரைக் கொம்பே.

கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.

கர்நாடகத்தில் பணப் போட்டி

ண பல போட்டியில் உச்சம் தொடும் கர்நாடக சட்ட மன்றத் தேர்தல் பற்றிய கட்டுரை படித்தேன். மக்கள் சேவைக்காக அரசியல்வாதிகள் தங்களின் பணத்தைக் கோடிக்கணக்கில் வாரி வழங்கும் வள்ளல்களாக மாறியிருப்பது ஆச்சரியம் தரும் விஷயம்தான். குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள் நூற்றுக்கணக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். பெரும் பணக்காரர்கள் அதாவது கோடீஸ்வரர்களுக்கு அதிக வாய்ப்பளித்து வேட்பாளர்களாக அறிவித்துள்ளன கட்சிகள். இதனால் எதிர்காலத்தில் ஜனநாயகத்துக்கு ஏற்படப்போகும் ஆபத்துகளை எண்ணி மக்கள்தான் நிதானித்து வாக்களிக்க வேண்டும்.

கே.ராமநாதன், மதுரை.

உயிரைப் பறிக்கும் கேபிள் டிவி

கீ

ழ்வேளூரைச் சேர்ந்த கணேசன், ராஜு என்ற சகோதரர்கள் டிவி கேபிளைச் சரி செய்ய முயன்று உயிரைப் பறிகொடுத்தது அதிர்ச்சியளிக்கிறது. மின்சாரக் கம்பங்களில் டிவி கேபிள் கம்பிகள் கட்டப்பட்டு, மின் கம்பிகளுக்கு இணையாக இழுக்கப்பட்டு வீடுகளில் இணைப்பு தரப்பட்டிருப்பதையும், கேபிள் டிவி கம்பிகள் அறுந்து தொங்கிக்கொண்டிருப்பதையும் பல இடங்களில் காணலாம். மின்வாரியம் கண்காணித்துத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x