Published : 02 May 2018 09:09 AM
Last Updated : 02 May 2018 09:09 AM

இப்படிக்கு இவர்கள்: மார்க்ஸ், எங்கெல்ஸின் தீர்க்கதரிசனம்

எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர்.

மார்க்ஸ், எங்கெல்ஸின் தீர்க்கதரிசனம்!

30

வயது மார்க்ஸாலும் 28 வயது எங்கெல்ஸாலும் எழுதப்பட்டு 1848-ல் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இன்றைய பொருத்தப்பாட்டையும் 20, 21-ம் நூற்றாண்டுகளில் முதலாளியப் பொருளாதாரம் பெற்றுள்ள பரிமாணத்தைப் பற்றி (உலகமயமாக்கல்) தீர்க்கதரிசனத்துடன் அது கூறிய கருத்துகளையும் எடுத்துக்காட்டி, ‘முதலாளியப் பேயை’ விரட்டியடிக்காமல் சுதந்திரத்தையோ மகிழ்ச்சியையோ அனுபவிக்க முடியாது என்பதை வலியுறுத்துகிறது ‘21-ம் நூற்றாண்டுக்கு மார்க்ஸ் என்ன சொல்கிறார்’ (மே 1, 2018) என்ற கட்டுரை.

கட்டுரையாளர் யானிஸ் வரூஃபக்கீஸ் பற்றியும் சொல்ல ஏராளம் உண்டு. கிரேக்க நாட்டில் நவதாராளவாதப் பொருளாதாரத்தை ஒழிப்பதாகவும் சர்வதேச நிதி நிறுவனங்களிலிருந்து வாங்கப்பட்ட கடன்களால் ஓட்டாண்டியாகிப்போன அந்த நாட்டை மீட்பதாகவும் கூறி, பெருவாரியான மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த இடதுசாரிக் கூட்டணியான ‘ஸிரிஸா’, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கும் கட்டளைகளுக்கும் மண்டியிட்டதால், அந்தக் கூட்டணி அமைத்த அமைச்சரவையிலிருந்து விலகியவர் யானிஸ். இலக்கியச் சுவை மிகுந்த எழுத்துகளுக்குச் சான்றாக அவரது ‘அடல்ட்ஸ் இன் தி ரூம்: மை பேட்டில் வித் யூரோப்ஸ் டீப் எஸ்டாப்ளிஷ்மெண்ட்’ நூலைச் சொல்லலாம். பொருளாதார விஷயங்களைத் துப்பறியும் நாவலைப் போல விறுவிறுப்புடன் சொல்கிறது. கட்டுரையைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்துள்ளார் ஆசை!

முத்துகிருஷ்ணன், மின்னஞ்சல் வழியாக.

இறந்துவரும் விவசாயம்

ப்ரல் 30 அன்று வெளியான ‘விவசாயிகளுக்கான போராட்டங்கள் ஏன் எரிச்சலூட்டுகின்றன?’ கட்டுரை விவசாயிகள் குறித்த இந்த அரசின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை அருமையாக விவரிக்கிறது. என் தாத்தாவுக்கு 16 வேலி நன்செய் நிலம் இருந்தது. அவருக்கு 6 ஆண்கள், 4 பெண்கள். ஒரு காலத்தில் என் மாமா மிராசுவாக இருந்து, திருப்பூரில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து 60 வயதுக்கு முன்னரே இறந்துவிட்டார். ஏனைய மாமாக்களும் அப்படியே. தற்போது கிராமத்து வீட்டை விற்கத் தீவிரம் காட்டுகிறார்கள். பெரிய தூண், முற்றம், பெரிய பெரிய அறைகள், பெரிய பத்தாயம், இரும்புப் பெட்டி எல்லாம் போய்விட்டது. நான் இரண்டாவது தலைமுறை. இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின் எங்கள் விவசாயப் பின்னணி பற்றி யாருக்கும் நினைவிருக்காது. என்னைப் போன்றோரின் எண்ணக் குமுறலின் பிரதிபலிப்பாக இருந்தது கட்டுரை. நன்றி!

ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

கல்வித் துறையில் கயமைகள்

ல்கலைக்கழகம் தன்னாட்சி, சுயநிதி அரசு மற்றும் மானியம் பெறும் கல்லூரிகளில் என்றைக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் முறை அமலுக்கு வந்ததோ, அன்றிலிருந்தே கயமைகளும் தொடங்கலாயின. இலைமறை காய்போல் தொடர்ந்துவந்த இக்கயமைகள், நிர்மலா தேவி விவகாரத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதிகாரபீடத்தில் உள்ளவர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். முறையான விசாரணை நடந்தால் கல்விக்கூடங்களின் தரம் பாதுகாக்கப்படும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x