

‘கிராமஃபோன்’ பகுதியில் வெளியான ‘இளையராஜாவின் பாடல் பெற்ற ஸ்தலங்கள்’ கட்டுரை அருமையான பதிவு. இளையராஜாவுடனான தனது இளமைக் காலத்தைக் கட்டுரையாசிரியர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். இசைஞானியின் பாடல்களைக் கேட்காமல் என் இரவுகள் தொடங்கியதும் இல்லை, முடிந்ததும் இல்லை.
சிறிது நேரம் இசைஞானியின் பாடல்களைக் கேட்டுவிட்டுத் தூங்கலாம் என்று ஐ-பாடில் பாடல்களைக் கேட்கத் தொடங்கினால், நேரம் போவதே தெரியாது. தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆகிவிடும். அவரது பாடல்களில் அப்படியே லயித்துவிடுவேன்.
- ஞானசம்பந்தன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…