

தமிழ்த் தேசியர்கள் இன்னும் களத்தில் இருப்பதாக சுப.வீரபாண்டியன் சொல்லியிருக்கிறார். கால மாற்றத்துக்குத் தகுந்தவாறு தமிழ்த் தேசியக் கருத்தாக்கத்திலும் சில மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கலாம்.
இந்தி, சமஸ்கிருத மற்றும் இந்துத்துவ எதிர்ப்பையே தமிழ்த் தேசியத்துக்கான அரசியலாக அவர்கள் தொடர்ந்து முன்வைத்துவருகின்றனர். தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவும் ஆக்கபூர்வ செயல்பாடுகளை அவர்கள் இன்றளவும் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை அவர்களாக சொல்லித்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உலகமயமாக்கல் உள்ளிட்ட நவீனக் காரணிகளால் மொழிக்கே அந்நியமாகிப் போயிருக்கும் இளந்தலைமுறைக்கு தமிழ்த் தேசியம் எனும் சொல்லாடல் பற்றித் தெரிந்திருக்குமா எனும் கேள்வியும் எழுகிறது.
- முருகவேலன், கோபிசெட்டிபாளையம்.